இரணைமடுவில் மீன்பிடித்தவர் உயிரிழப்பு!

கிளிநொச்சி இரணைமடுக் குளத்தில் மீன்பிடிக்கச் சென்ற இளைஞர் ஒருவர், படகு நிலைதடுமாறி சாய்ந்ததில் தவறி வீழ்ந்து உயிரிழந்தார்.

கிளிநொச்சி சாந்தபுரத்தைச் சேர்ந்த கிருஸ்ணமூர்த்தி மயூரன் (வயது 22) என்ற இளைஞரே உயிரிழந்தவர். உயிரிழந்தவரின் உடலை மீட்ட பொலிஸார் சடலத்தை கிளிநொச்சி மாவட்ட மருத்துவமனையில் ஒப்படைத்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *