தொண்டைமானாறு நீரேரியில் முதியவரின் சடலம்!

தொண்டைமானாறு நீரேரியில் முதியவரின் சடலம்!

தொண்­டை­மா­னாறு கடல் நீரே­ரி­யில் முதி­ய­வர் ஒரு­வ­ரின் சடலம் நேற்­றுக் காலை கண்­டெ­டுக்­கப்­பட்­டுள்­ளது. வல்­வெட்­டித்­துறை, இத்­தி­ய­டி­யைச் சேர்ந்த கந்­தையா தேவ­ராசா (வயது-–76) என்ற முதி­ய­வரே சட­ல­மா­கக் கண்­டெ­டுக்­கப்­பட்­டுள்­ளார்.

சட­ல­மா­க தொண்டைமானாறில் கண்­டெ­டுக்­கப்­பட்­ட­வர் நேற்­று­முன்­தி­னம் முதல் காணா­மல் போயி­ருந்­தார் என்று உற­வி­னர்­கள் தெரி­வித்­துள்­ள­னர்.
நேற்­றுக் காலை கடல் நீரே­ரி­யில் மீன் பிடிக்­கச் சென்­ற­வர்­கள் சட­லம் ஒன்று நீரே­ரி­யில் மிதப்­பதை அவ­தா­னித்து அச்­சு­வே­லிப் பொலி­ஸா­ருக்­குத் தக­வல் வழங்­கி­யி­ருந்­த­னர். அதை­ய­டுத்­துச் சட­லத்தை மீட்­ப­தற்­கு­ரிய நட­வ­டிக்­கை­கள் முன்­னெ­டுக்­கப்­பட்­டன.

மல்­லா­கம் நீதி­வான் சட­லத்­தைப் பார்­வை­யிட்­ட­து­டன், உடற்­கூற்­றுப் பரி­சோ­த­னைக்­காக சட­லத்தை யாழ்ப்­பா­ணம் போதனா மருத்­து­வ­ம­னை­யில் ஒப்­ப­டைக்க உத்­த­ர­விட்­டார்.

Leave a Reply