இலங்கையில் சிறை பிடிக்கப்பட்ட மீனவர்களை விடுவிக்குமாறு ராமேஸ்வரத்தில் ஆர்ப்பாட்டம்

இராமேஸ்வரம் – தங்கச்சிமடம் பகுதியில் இலங்கை கடற்படையால் சிறை பிடிக்கப்பட்ட மீனவர்கள் மற்றும் படகுகளை விடுவிக்க கோரி ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.

ராமேஸ்வரம் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து கடந்த மார்ச் மாதம் தனுஷ்கோடி – தலைமன்னார் இடையே மீன்பிடித்துக் கொண்டிருந்த ராமேஸ்வர மீனவர்களை கடற்படை கைது செய்துள்ளது.

குறித்த ராமேஸ்வர மீனவர்கள், எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி அப்பகுதிக்கு ரோந்து வந்த இலங்கை கடற்படையினர் ஒரு விசைப்படகையும் அதில் இருந்த 12 மீனவர்களையும் கைது செய்து யாழ்ப்பாணம் சிறையில் அடைத்துள்ளது.

இதையடுத்து அவர்களுடைய காவல்நீடிப்பு வருகின்ற மே 12ஆம் திகதி முடிந்ததன் பின்னர், இலங்கை கிளிநொச்சி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளனர்.

இந்த நிலையில், இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ள ராமேஸ்வரம் மீனவர்கள் 12 பேரை விடுதலை செய்ய வலியுறுத்தியும், கடந்த 2019 ஆண்டு முதல் 2022 ஆம் ஆண்டு வரை இலங்கை கடற்படையால் பறிமுதல் செய்யப்பட்டு இலங்கை வசமுள்ள விசைப்படகுகளை மீட்டுத்தரக் கோரியும், விடுதலை செய்யப்பட்டு நாடு திரும்பாத மண்டபத்தைச் சேர்ந்த 4 மீனவர்களை மீட்கக் கோரியும் மத்திய, மாநில அரசுகளை வலியுறுத்தி தங்கச்சிமடத்தில் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ராமேஸ்வரம் மீனவர்கள் ஈடுபட்டுள்ளனர்.

இதில் மண்டபம், ராமேஸ்வரம், பாம்பன் உள்ளிட்ட பகுதியில் இருந்து ஏராளமான மீனவர்கள் கலந்து கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *