2020 ஆம் ஆண்டுக்கான க.பொ.த சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகள் வெளியாகிய நிலையில், கஸ்ரப் பிரதேசப் பாடசாலையான வவுனியா பாவற்குளம் கணேசுவரா மகாவித்தியாலய மாணவர்கள் உயர் பெறுபேறுகளை பெற்று சாதனை படைத்துள்ளனர்.
அந்தவகையில், செல்வி.டேனுஜா அமிர்தலிங்கம் 8A விசேட சித்தி பெற்றுள்ளமையுடன், பாலகிருஸ்ணன் பிரவீன்-7A,B, சதுசனா புஸ்பகுமார்-7A,B,
ஜெயச்சந்திரன் டனுசன்-6A,2B,
பிளசியா இராஐகோபால்-5A,2B,S,
சஜீகா பாலகுமார்-4A,B,3C,
கஜேந்திரன் ரதுசன்-3A,B,3C ஆகிய பெறுபேறுகளுடன் கூடிய அடைவு மட்டங்களை பெற்றுள்ளனர். இவர்களுக்கான அழகியல் பாட பெறுபேறுகள் இதுவரை கிடைக்கப்பெறவில்லை.
மேலும், பரீட்சைக்குத் தோற்றிய மாணவர்களில் பலர் சிறந்த அடைவுமட்டத்தைப் பெற்றுள்ளமையுடன், இம் மாணவர்களில் பெரும்பாலானோர் க.பொ.த உயர்தரம் கற்பதற்கான தகுதியையும் பெற்றுள்ளனர்.
இச்சாதனை படைத்த மாணவர்களைப் பாராட்டி வாழ்த்துவதுடன், பல கஷ்டங்களுக்கு மத்தியிலும் தமது அர்ப்பணிப்பான அளப்பரிய சேவை மூலம் மாணவர் அடைவுமட்டத்தை உயர்த்திப் பாடசாலைக்கு பெருமை சேர்த்த ஆசிரியர்களையும், பிரதி அதிபர்கள், பகுதித்தலைவர் ஆகியோரையும் பாடசாலை சமூகம் பாராட்டி வாழ்த்துகின்றது.





