மாத்தறை – கந்தர பிரதேசத்தில் நபரொருவரை கைதுசெய்ய முயன்ற பொலிஸ் அதிகாரிகள் இருவரின் கைகளை கடித்துவிட்டுத் தப்பியோட முயற்சித்த நபர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
இந்த நிலையில், சந்தேக நபரை எதிர்வரும் 5 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க மாத்தறை நீதவான் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
இச் சம்பவத்தில் , காயமடைந்த பொலிஸ் அதிகாரிகள் இருவரும் தலல்ல வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக ஊடகப்பிரிவு கூறியுள்ளது.
மேலும் தெரியவருவது,
கொலை வழக்கொன்றின் சாட்சியாளருக்கு கொலை மிரட்டல் விடுக்கப்படுவதாக கடந்த 25 ஆம் திகதி 119 என்ற பொலிஸ் அவசர உதவி இலக்கத்துக்கு முறைப்பாடு கிடைத்துள்ளது.
அங்கு வந்த 7 பேர் கொண்ட குழுவினர் அயலவர்கள் மீது தாக்குதல் நடத்தியுள்ளதாகவும் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
கிடைக்கப்பெற்ற முறைப்பாடுக்கமைய, குறித்த சாட்சியாளரின் வீட்டிற்கு பொலிஸார் சென்றுள்ளனர்.
அப்போது, அங்கு வாளுடன் சென்ற சந்தேக நபரை கைது செய்வதற்கு முயற்சித்தபோது, அதற்கு எதிர்ப்பு வெளியிட்டு பொலிஸ் அதிகாரிகளின் கைகளை கடித்துள்ளார்.
இதனையடுத்து. பொலிஸார் சந்தே நபரை மடக்கிப்பிடித்து கைதுசெய்துள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு குறிப்பிட்டுள்ளது.


