
அலரி மாளிகையில் தற்போது பொதுஜன பெரமுனவின் ஆதரவாளர்கள் முன்னெடுத்து வரும் போராட்டத்தில் ஊடகவியலாளர் மீதும் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவை பதவி விலக வேண்டாமென வலியுறுத்தி அலரி மாளிகையில் தற்போது பாரிய போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
இதன்போது ‘காலிமுகத்திடலுக்குச் செல்ல இதுதான் நேரம்’ என போராட்டக்காரர்கள் கோசமெழுப்பி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதேநேரம், இங்கு கருத்து தெரிவித்த ஜோண்ஸ்டன் பெர்னாண்டோஇ பிரதமர் பதவி விலகினால் அரசியல் நெருக்கடி உருவாகுமென தெரிவித்துள்ளார்.

