பொலிஸாரின் தடைகளை மீறி கோட்டா கோ கமவிற்குச் சென்ற மஹிந்த ஆதரவாளர்கள்!

பொலிஸ் தடையை உடைத்துக்கொண்டு பிரதமரின் ஆதரவாளர்கள் அணி காலி முகத்திடலில் நோக்கிச் செல்கின்றனர்.

அதேநேரம், காலிமுகத்திடலிலும் கலகம் அடக்கும் பொலிஸார் குவிக்கப்பட்டுள்ளதுடன், நீர்த்தாரைப் பிரயோகிக்கும் வாகனங்களும் நிறுத்தப்பட்டுள்ளது.

இதேவேளை, மைனா கோ கமவில் போராட்டக்காரர்கள் மீதும் ஊடகவியலாளர்கள் மீதும் தொடர்ச்சியாக தாக்குதல் மேற்கொள்ளப்படுகின்றது.

அலரி மாளிகையில் இருந்துச் சென்ற மஹிந்த ஆதரவாளர்களால் இவ்வாறு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதுடன் மைனா கோ கம தற்போது போர்க்களமாக மாறியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

மேலும் போராட்டக்காரர்களின் கூடாரங்கள் அனைத்தும் அடித்து நொறுக்கப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.

மேலும் அலரி மாளிகையில் கோசமெழுப்பிய போராட்டக்காரர்கள் “காலிமுகத்திடலுக்குச் செல்ல இதுதான் நேரம்“ என தெரிவித்த நிலையில், தற்போது காலிமுகத்திடலை நோக்கிச் செல்கின்றமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply