தடைகளை தாண்டி விரைந்து செல்லும் மகிந்த ஆதரவாளர்கள்! திணறும் பொலிஸார்

பொலிஸாரின் தடைகளை மீறி காலிமுகத்திடலை நோக்கி மஹிந்த ஆதரவாளர்கள் முன்னேறிச் சென்றுள்ளனர்.

காலிமுகத்திடலை நோக்கிச் சென்ற மஹிந்த ஆதரவாளர்கள் சற்றுமுன் பொலிஸாரால் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.

கலகம் அடக்கும் பொலிஸாரால் அவர்கள் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளனர்.

அதேநேரம், காலிமுகத்திடலிலும் கலகம் அடக்கும் பொலிஸார் குவிக்கப்பட்டுள்ளதுடன், நீர்த்தாரை வாகனங்களும் நிறுத்தப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.

இதேவேளை, மைனா கோ கமவில் போராட்டக்காரர்கள் மீதும் ஊடகவியலாளர்கள் மீதும் தொடர்ச்சியாக தாக்குதல் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

அலரி மாளிகையில் இருந்துச் சென்ற மஹிந்த ஆதரவாளர்களால் இவ்வாறு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதுடன் மைனா கோ கம தற்போது போர்க்களமாக மாறியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

மேலும் போராட்டக்காரர்களின் கூடாரங்கள் அனைத்தும் அடித்து நொறுக்கப்பட்டுள்ளது.

மேலும் அலரி மாளிகையில் கோசமெழுப்பிய போராட்டக்காரர்கள் “காலிமுகத்திடலுக்குச் செல்ல இதுதான் நேரம்“ என தெரிவித்த நிலையில், தற்போது காலிமுகத்திடலை நோக்கிச் செல்கின்றமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply