நாயாறு பகுதியில் இடம்பெற்ற கோரவிபத்து

முல்லைத்தீவில் – நாயாறு பகுதியில் மோட்டார் சைக்கிள் ஒன்று வேகக் கட்டுப்பாட்டை இழந்து விபத்தில் சிக்கியதில் இளைஞர் ஒருவர் படுகாயம் அடைந்துள்ளார்.

இச் சம்பவம் இன்று பிற்பகல் இடம்பெற்றுள்ளது.

செம்மலை கிழக்கு- நாயாறு பகுதியைச் சேர்ந்த 23 வயதுடைய ஏ.கதீஸ்கரன் இளைஞரே விபத்தில் படுகாயம் அடைந்துள்ளார்.

மேலும், செம்மலையிலிருந்து நாயாறு நோக்கிப் பயணித்துக்கொண்டிருந்த மோட்டார் சைக்கிள் வேகக் கட்டுப்பாட்டை இழந்து வீதியோரத்தில் இருந்த வடலியுடன் மோதியுள்ளது.

அதில், அவ் இளைஞரின் கழுத்துப் பகுதியில் வெட்டுக் காயம் ஏற்பட்டு படுகாயமடைந்துள்ளார்.

முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில், மேலதிக சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளார்.

Leave a Reply