பொலி­ஸா­ரின் கெடு­பி­டி­க­ளை­யும் மீறி தியாக தீபம் திலீபனுக்கு அஞ்சலி!

தமிழர் தாயகத்தில் தடைகளைத் தாண்டி திலீபனுக்கு அஞ்சலி!

இந்­திய அர­சி­டம் ஐந்து அம்­சக் கோரிக்­கை­களை முன்­வைத்து உண்­ணா­வி­ர­தம் இருந்து உயிர் நீத்த தியாகி திலீ­ப­னின் 34ஆவது ஆண்டு நினை­வேந்­தல் வடக்கு, கிழக்கு மாகா­ணங்­க­ளில் நேற்றுக் கடைப்­பி­டிக்­கப்­பட்­டது.

வடக்கு, கிழக்கு மாகா­ணங்­க­ளில் தியாகி திலீ­ப­னின் நினை­வேந்­தலை நடத்­து­வ­தற்கு பொலி­ஸார் நீதி­மன்­றங்­க­ளின் ஊடா­கச் சில தடை உத்­த­ர­வு­க­ளைப் பெற்று நினை­வேந்­த­லைத் தடுக்க முயன்­றி­ருந்­த­போ­தும், அவற்றை மீறி கொரோனா பாது­காப்பு சுகா­தார நடை­மு­றை­க­ளுக்கு அமை­யப் பல இடங்­க­ளில் அமை­தி­யான முறை­யில் அஞ்­சலி நிகழ்­வு­கள் நடை­பெற்­றன.

யாழ்ப்­பா­ணம் பல்­க­லைக் கழ­கத்­தில் மாண­வர்­க­ளால் நினை­வேந்­தல் ஏற்­பாடு செய்­யப்­பட்­டி­ருந்­தது. நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர்­கள், பிர­தேச சபை உறுப்­பி­னர்­கள், தமிழ் அர­சி­யல் பிர­மு­கர்­கள் ஒழுங்­க­மைக்­கப்­பட்ட இடங்­க­ளில் அஞ்­சலி செலுத்­த­னர். வவு­னி­யா­வில் காணா­மல் ஆக்­கப்­பட்­ட­வர்­க­ளின் உற­வி­னர்­கள் அஞ்­சலி செலுத்­தி­னர்.

1987ஆம் ஆண்டு செப்­ரெம்­பர் மாதம் 15ஆம் திகதி இந்­திய அர­சி­டம் ஐந்து அம்­சக் கோரிக்­கை­களை முன்­வைத்து திலீ­பன் உண்­ணா­வி­ர­தத்தை ஆரம்­பித்­தார். அவ­ரது கோரிக்­கை­க­ளுக்கு இந்­திய அரசு செவி­சாய்க்­காத நிலை­யில், தனது கொள்­கை­யில் உறு­தி­யாக நின்று செப்­ரெம்­பர் மாதம் 26ஆம் திகதி முற்­ப­கல் 10.48 மணிக்கு உயிர் நீத்­தார்.

ஆண்­டு­தோ­றும் தியாக தீபம் திலீ­ப­னின் நினை­வேந்­தல் தமிழ் மக்­க­ளால் கடைப்­பி­டிக்­கப்­ப­டும் நிலை­யில், இம்­முறை நினை­வேந்­த­லைத் தடுக்­கும் நோக்­கு­டன் பொலி­ஸார் நீதி­மன்­றங்­கள் ஊடா­கத் தடை உத்­த­ர­வு­க­ளைப் பெற்­றி­ருந்­த­னர். நல்­லூ­ரில் உள்ள தியாக தீபம் திலீ­ப­னின் நினை­வுத் தூபி­யில் அஞ்­சலி செலுத்த முயன்ற நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர் செ.கஜேந்­தி­ரன் பொலி­ஸா­ரால் கைது செய்­யப்­பட்­டி­ருந்­தார். ஆயி­னும் பொலி­ஸா­ரின் கெடு­பி­டி­க­ளை­யும் மீறி தமி­ழர் பகு­தி­க­ளில் உணர்­வு­டன் தியாகி திலீ­ப­னின் நினை­வேந்­தல் நிகழ்­வு­கள் நேற்று நடை­பெற்­றன.

Leave a Reply