யாழில் பொலிஸ் புலனாய்வுக்கு கிடைத்த இரகசிய தகவலின் படி சமூக வலயதளத்தில் வாளுடன் வைத்து “டிக்டொக்” செய்தவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
யாழ். மாவட்ட பொலிஸ் புலனாய்வு பிரிவினர் சந்தேகநபரை சுன்னாகம் நாகம்மா வீதியில் கைதுசெய்துள்ளனர்.
மேலும், இந்நபர், சங்கானையைச் சேர்ந்த 19 வயதுடையவர் என தெரியவருகின்றது.
அத்துடன், கைதான நபரும், வாளும் சுன்னாக பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.





