
மிரிஹான பூங்காவில் அனுமதிப்பத்திரமின்றி ’ட்ரோன்’ கமராவை பறக்கவிட்ட இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைதுசெய்யப்பட்ட சந்தேகநபர்களிடமிருந்து ’ட்ரோன்’ கமராவும் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மஹரகம பகுதியைச் சேர்ந்த 32 மற்றும் 33 வயதான இருவரே குறித்த சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், சம்பவம் தொடர்பில் மிரிஹான பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

