கொரோனாவால் மேலும் 51 பேர் உயிரிழப்பு

இலங்கையில் கொரோனாத் தொற்றால் மேலும் 51 பேர் உயிரிழந்தனர்.

நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 12,731 பேராக அதிகரித்துள்ளது.

இதேவேளை, கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து 812 பேர் பூரணமாக குணமடைந்து இன்று வீடுகளுக்கு திரும்பியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

மேலும், நாட்டில் இதுவரை கொரோனாத் தொற்றில் இருந்து பூரணமாக குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 4 இலட்சத்து 55 ஆயிரத்து 344 ஆக அதிகரித்துள்ளது.

இதேவேளை, நாட்டில் கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை 5 இலட்சத்து 13 ஆயிரத்து 609 ஆக பதிவாகியுள்ளது.

Leave a Reply