நாட்டில் மேலும் 715 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.
சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு இதனை தெரிவித்துள்ளது.
இதற்கமைய நாட்டில் இதுவரை அடையாளம் காணப்பட்ட கொரோனா வைரஸ் தொற்றாளர்களின் மொத்த எண்ணிக்கை 514,324 ஆக அதிகரித்துள்ளது.
இதேவேளை, நாட்டில் மேலும் 812 பேர் கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து குணமடைந்துள்ள நிலையில், இதுவரை கொவிட் தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 455,344 ஆக அதிகரித்துள்ளது.


