அலரி மாளிகைக்கு முன் கண்ணீர்ப் புகைப் பிரயோகம்!

அலரி மாளிகைக்கு முன்னால் தற்போது பொலிஸார் கண்ணீர்ப் புகைத் தாக்குதல் நடத்தியுள்ளனர்.

அலரி மாளிகைக்குள் வலுக்கட்டாயமாக நுழைய முயன்ற போராட்டக் காரர்களை கலைப்பதற்கென்று இவ்வாறு கண்ணீர்ப்புகைத் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதற்கு முன்னர் அலரி மாளிகையைச் சுற்றி இருந்த வாகனங்களை ஆர்ப்பாட்டக் காரர்கள் அடித்து நொறுக்கியிருந்த நிலையில் அதன் பின்னர் ஆயுதம் தாங்கி கடற்படையினர் அலரி மாளிகையைச் சுற்றி பாதுகாப்பு கடமையில் ஈடுபடுத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply