யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த இளைஞன் ஒருவர் தனது நாக்கினை சத்திர சிகிச்சை மூலம் இரண்டாக பிளந்த புகைப்படம் ஒன்றை சமூக வலைத்தளங்களில் பதிவிட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
யாழ்ப்பாண நகரில் பச்சை குத்தும் கடை ஒன்றை நடத்தி வரும் இளைஞனே இவ்வாறு தனது நாக்கின் முன்பகுதியை இரண்டாக வெட்டியுள்ளார்.
காலிக்குச் சென்று சத்திர சிகிச்சை மேற்கொண்டதாக குறிப்பிடப்படுகின்றது.
அத்தோடு நாகரிகம் என்ற பெயரில் இந்த வகையான முட்டாள்தனங்களில் ஈடுபடுவது ஆபத்தானது என்பது குறிப்பிடத்தக்கது. குறிப்பிட்ட இளைஞனின் நடவடிக்கை தொடர்பாக பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.





