நாட்டில் மேலும் 268 கொரோனா வைரஸ் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்றுநோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.
முன்னதாக இன்று 715 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதியானது.
அதற்கமைய, இன்று திங்கட்கிழமை இதுவரையில் 983 புதிய கொரோனா வைரஸ் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
இதனையடுத்து, நாட்டில் இதுவரை அடையாளம் காணப்பட்ட கொவிட் தொற்றாளர்களின் மொத்த எண்ணிக்கை 455,612 ஆக அதிகரித்துள்ளது.


