சமத்துவக் கட்சியின் அலுவலகம் மீது தாக்குதல்-சந்திரகுமார் பதில்.

நேற்றையதினம் நாட்டின் பல பகுதிகளிலும் அரச தரப்பினரின் வீடுகள் மற்றும் அலுவலகங்கள் மீது தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

இந்நிலையில் சமத்துவக் கட்சியின் கிளிநொச்சி அலுவலகமும் தாக்கப்பட்டதாக செய்திகள் வெளியாகின.

இதுதொடர்பில் சமத்துவக் கட்சியின் தலைவரரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான மு.சந்திரகுமார் குறிப்பிடுகையில்,

எனது அலுவலகம் மற்றும் வாகனம் தாக்கப்பட்டது என்று முற்றிலும் உண்மைக்கு புறம்பான தகவல்களை சில விசமிகள் வெளியிட்டு வருகின்றனர் என அறிய முடிகிறது.

இது முழுக்க முழுக்க உண்மைக்கு புறம்பான தகவல் என்பதனை கட்சியின் ஆதரவாளர்கள் மற்றும் பொது மக்களுக்கு அறியத் தருகின்றேன்.நாம் எப்பொழுதும் போன்று மக்களுக்கான பணியினை மேற்கொண்டு வருகின்றோம்.

மக்களுக்கு எதிரானநடவடிக்கைகளை எதிர்த்தும், கண்டித்தும் வந்திருகின்றோம். குறிப்பாக அவசரகாலச் சட்டம் மற்றும் மக்களுக்கு எதிரான வன்முறைகள் என்பவற்றை தொடர்ச்சியாக எதிர்த்தே வந்துள்ளோம் என்பதனையும் இந்த இடத்தில் குறிப்பிட விரும்புகின்றேன் என குறிப்பிட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *