மகிந்தவின் ஆதரவாளர்களுக்கு தேநீர் கொடுத்த ஆர்ப்பாட்டக்காரர்கள்!

நேற்று கொழும்பு காலிமுகத்திடலில் இடம்பெற்ற கலவரத்தில் தாக்குதலை மேற்கொண்ட முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்சவின் ஆதரவாளர்கள் பல இடங்களில் சிறைப்பிடிக்கப்பட்டு ஆர்ப்பாட்டக்காரர்களால் தாக்கப்பட்டு வருகின்றனர்.

இதற்கமைய ஒரு சிலரை மின்கம்பத்ததுடன் கட்டி வைத்தும் மறு பகுதியினரை குப்பை வண்டிக்குள் தள்ளியும் தாக்கினர். இதனைக் கண்ட மற்ற பகுதி ஆதரவாளர்கள் பேரவாவிக்குள் குதித்துள்னளனர். ஆனாலும் ஆர்ப்பாட்டக்காரர்கள் அவர்களையும் விட்டுவிடாது வாவிக்குள் சிறைப்பிடித்தனர்.

நேற்று கலவரத்திலிருந்து இன்று வரை வாவிக்குள்ளேயே காணப்பட்ட முன்னாள் பிரதமரின் ஆதரவாளர்களுக்கு ஆர்ப்பாட்டக்காரர்கள் மனிதாபிமான முறையில் தேநீர் கொடுத்த சம்பவம் அனைவரையும் நெகிழ வைத்தது.

Leave a Reply