
ஐரோப்பாவில் ஐரோப்பிய ஒன்றியத்திற்குப் புறம்பாக மற்றுமொரு ஐரோப்பிய நாடுகளின் அரசியல் கூட்டு ஒன்று வேண்டுமென பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மேக்ரோன் தெரிவித்துள்ளார்.
குறிப்பாக உக்ரைன் போன்ற நாடுகள் ஐரோப்பிய ஒன்றியத்தில் இணைவதாக இருந்தால் அதற்கு ஒரு தசாப்தம் தேவைப்படும் எனக் கூறிய அவர், இந்த நிலையை சரி செய்வதற்காக இலகுவாக நாடுகள் இணையக்கூடிய அமைப்பு ஒன்று ஐரோப்பாவிற்கு வேண்டுமெனக் கூறியுள்ளார்.
திங்கட்க்கிழமை ஐரோப்பிய பாராளுமன்றத்தில் உரையாற்றிய போது மக்ரோன் இதனைக் குறிப்பிட்டுள்ளார். மேலும் அவர் தனது கடந்த மாத தேர்தல் வெற்றியை, பிரான்ஸ் மக்கள் பெரிய ஐரோப்பாவை(அதிக நாடுகள் கொண்ட ஐரோப்பாவை) வேண்டுகின்றமைக்கு உதாரணமாகக் கூறியுள்ளார்.
மேலும் உக்ரைன், மோல்டோவா, ஜோர்ஜியா ஆகிய நாடுகள் ஐரோப்பாவில் அங்கமாக அனுமதிக்கப்பட வேண்டியதன் முக்கியத்துவத்தையும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்த புதிய ஐரோப்பிய கூட்டு, ஜனநாயக நாடுகளைக் கொண்டதாக இருக்க வேண்டும் எனவும் அவர் கூறியுள்ளார்.