ஜனாதிபதி கோட்டாவின் கீழ் இடைக்கால அரசு – ஏற்றுக்கொள்ளப்போவதில்லை என்கின்றது ஐக்கிய மக்கள் சக்தி

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் கீழ் அமையும் இடைக்கால அரசாங்கத்தை ஏற்றுக்கொள்ளப்போவதில்லை என ஐக்கிய மக்கள் சக்தி தெரிவித்துள்ளது.

ஆகவே ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ பதவி விலக வேண்டும் அக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார தெரிவித்துள்ளார்.

மேலும் ஜனாதிபதி தலைமையில் இடைக்கால அரசாங்கத்தை அமைப்பது தொடர்பான பேச்சுவார்த்தையில் ஐக்கிய மக்கள் சக்தி இணையாது என்றும் அவர் கூறியுள்ளார்.

இடைக்கால அரசாங்கத்தை அமைக்கும் வகையில் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ நேற்று தனது பதவியை இராஜினாமா செய்தார்.

இதேநேரம் சர்வகட்சி அரசாங்கத்தை அமைக்க பதவிகளை ஏற்குமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அரசியல் கட்சிகளுக்கு அழைப்பு விடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply