ராஜபக்சாக்கள் ஒரு மாதத்துக்கு முன்னரே தப்பி ஓடிவிட்டனர்! – வெளியான புதிய தகவல்

ஆளும் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களின் குடும்ப உறுப்பினர்களும், ராஜபக்ஷ குடும்ப உறுப்பினர்களும் கொளுத்தப்பட்ட இல்லங்களில் இல்லை. அவர்கள் உண்மையிலே ஒருமாதத்திற்கு முன்னரே இருப்பிடங்களில் இருந்து ஒழிந்துவிட்டார்கள் என வடக்கு மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் சபா குகதாஸ் தெரிவித்துள்ளார்.

நாட்டில் நேற்று இடம்பெற்ற கலவரம் தொடர்பில் சமூகம் மீடியாவுக்கு கருத்து தெரிவிக்கையில்,

நேற்றையதினம் நாட்டில் வன்முறைச் சம்பவம் வெடித்த நிலையில், ஆளும் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களின் வீடுகள் கொளுத்தப்பட்டுள்ளன.

ஆனால், கொளுத்தப்பட்ட வீடுகளில் அவர்களின் குடும்ப அங்கத்தவர்கள் இல்லை. ஆளும் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களின் குடும்ப உறுப்பினர்களும் ராஜபக்ஷ குடும்ப உறுப்பினர்களும் கொளுத்தப்பட்ட இல்லங்களில் இல்லை.

அவர்கள் எங்கு ஒழிந்திருக்கிறார்கள் என்பது இன்னும் எவருக்கம் தெரியாதளவிற்கு இருக்கின்றது. அவர்கள் உண்மையிலே ஒருமாதத்திற்கு முன்னரே இருப்பிடங்களில் இருந்து ஒழிந்துவிட்டார்கள். ஏனெனில் மக்களின் மனங்கள் எப்படி இருக்கிறது. அதனை தங்களால் சீர்செய்த கொள்ள முடியாது.

அதன்காரணமாகத்தான் அவர்கள் ஒழிந்துகொண்டு இருக்கிறார்கள். நேற்றைய தினம் எரிக்கப்பட்ட வீடுகளில் பாராளுமன்ற உறுப்பினர்கள் சார்ந்த எவரும் இருக்கவில்லை. – என்றார்.

Leave a Reply