வன்முறையானது நாட்டை மரபுரிமையாகக் கொண்டது எனவும், பல தசாப்தங்களாக நாடு இவ்வாறான அழிவுகளை அனுபவித்துள்ளதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் இன்று கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
எனவே இந்த இக்கட்டான தருணத்தில் அனைவரும் அமைதியாகவும் நிதானமாகவும் செயற்பட வேண்டும் என்று கூறிய எதிர்க்கட்சித் தலைவர், ஜனநாயகத்தின் மீது தாக்குதல் நடத்திய இளைஞர்கள் மற்றும் மக்களை தாக்கிய ராஜபக்ஷ அரசாங்கத்தில் எவரும் தப்ப முடியாது என்றார்.

