இந்தியா இராணுவத்தை இலங்கைக்கு அனுப்ப வேண்டும்! சுப்ரமணியம் சுவாமி கோரிக்கை

இந்திய இராணுவத்தை இலங்கைக்கு அனுப்பி வைக்க வேண்டுமென இந்தியாவின் முன்னாள் அமைச்சர் சுப்ரமணியம் சுவாமி கோரிக்கை விடுத்துள்ளார்.

இலங்கைக்கு இந்திய இராணுவத்தை அனுப்பி வைத்து அரசியல் அமைப்பின் சுயாதீனத்தன்மையை உறுதி செய்ய வேண்டுமென கோரியுள்ளார்.

இந்தியாவிற்கு எதிரான வெளிநாட்டு சக்திகளின் கரம் இலங்கையில் ஓங்கியுள்ளது எனவும், மக்களின் கோபத்தை அவர்கள் தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்வதாகவும் அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.

இந்த நடவடிக்கையானது இந்தியாவின் தேசியப் பாதுகாப்பிற்கு குந்தகம் ஏற்படுத்தும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

டுவிட்டர் பதிவொன்றின் மூலம் அவர் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.

இந்த டுவிட்டர் பதிவிற்கு பிரபல பாலிவுட் நட்சத்திரம் அமிதாப் பச்சன் பதிலளித்துள்ளார்.

இந்திய படையினரை ஒரு போதும் இலங்கைக்கு அனுப்பி வைக்கக் கூடாது என அவர் பதில் பதிவிட்டுள்ளார்.

Leave a Reply