மீண்டும் அமைதியான முறையில் போராட்டம் முன்னெடுப்பு

கொழும்பு,மே 10

காலி முகத்திடல் கோட்டா கம பகுதியில் தற்போது அமைதியான முறையில் போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

கோட்டா கோ கம பகுதியில் மக்கள் மீண்டும் ஒன்றிணைந்து அமைதியான முறையில் போராட்டத்தினை முன்னெடுத்துள்ளனர்.

அலரிமாளிகைக்கு முன்பாக திங்கட்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது  அரச தரப்பு ஆதரவாளர்களினால் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டது.

மேலும் குறித்த தரப்பினர் காலி முகத்திடல் கோட்டா கோ கம போராட்டகளத்திற்கு பிரவேசித்து தாக்ககுதல் முன்னெடுத்திருந்தனர்.

இதனையடுத்து  இவ்வாறு அமைதியான முறையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தவர்கள் மீது  போராட்டங்களை மேற்கொண்டவர்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து நாட்டின் பல்வேறு பகுதிகளிலும்  எதிர்ப்பு போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

எவ்வாறாயினும்  நேற்றைய நாளில் பல பகுதிகளில் வன்முறை சம்பவங்கள்  பதிவாகியிருந்த நிலையில்  இன்றைய நாளில் பொலிஸார் மற்றும் முப்படையினர் நாட்டின் பல பகுதிகளிலும்   பாதுகாப்பு கடமைகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர் எனினும் இன்றும் பல்வேறு பகுதிகளில் அமைதியான முறையில் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

Leave a Reply