கிளிநொச்சியில் பொலீஸார் மக்கள் மோதல் பலர் காயம்!

கிளிநொச்சியில் பொலீஸார் மக்கள் மோதல் பலர் காயம்!

கிளிநொச்சி தர்மபுரம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வட்டக்கச்சி  இராமநாதபுரம் பகுதியில் வீட்டில் கசிப்பு இருப்பதாக தெரிவித்து இளைஞரைக் கைது செய்ததால் போலீசாருக்கும் வீட்டிலிருந்தவர்களுக்குமிடையே முரண்பாடு ஏற்பட்டுள்ளது.

இதனையடுத்து பொலிசார் குறித்த வீட்டிலிருந்த கர்ப்பினிப் பெண் மற்றும் மாற்றுத்திறனாளி ஒருவர் மீதும்  இளைஞரின் தாயார் மீதும் பொலிசார் தாக்குதல் மேற்கொண்டதாகவும் இதனால் கிராம மக்கள் பொலிசார் மீது தாக்குதல் மேற்கொண்டதாக தெரிவிக்கப் படுகிறது.

3 பொலிஸார்  காயமடைந்த நிலையில்  கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாக தர்மபுரம் பொலிசார் தெரிவித்துள்ளனர்.

[embedded content]

இதனையடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற பொலிஸ் உயரதிகாரிகள் நிலமைமையக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்ததுடன் 912 லீற்றர் கசிப்பும், கசிப்பு உற்பத்திக்கு பயன்படுத்தப்படும் உபகரனங்களும் பொலிசாரல் கைப்பற்றப்பட்டுள்ளன.

Leave a Reply