நீர்கொழும்பில் மோதல்: இன வன்முறையை தூண்ட முயற்சி

நீர்கொழும்பு,மே 10

நீர்கொழும்பில் இரண்டு குழுக்களிடையே மோதலொன்று இடம்பெற்றுள்ளது.

நீர்கொழும்பில் இன வன்முறையை ஏற்படுத்துவதற்கு சிலர் முயல்கின்றனர் என தகவல்கள் வெளியாகியிருந்தது.

அவென்டிரா ஹோட்டலை குறிப்பிட்ட சமூகமொன்றை சேர்ந்தவர்களே தீயிட்டு கொழுத்தினர் என வதந்தி பரப்பப்படுவதாக பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்.

கார், மோட்டார்சைக்கிளையும் சில கடைகளையும் இனந்தெரியாதவர்கள் தீயிட்டுகொழுத்தியுள்ளனர்.

இந்நிலையில் காயமடைந்தவர்கள் 7 பேர் நீர்கொழும்பு பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

டீன் சந்தியில் உள்ள சில கடைகள் தீக்கிரையாக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply