ஜனாதிபதி பதவி விலகுவதே நாட்டின் பிரச்சினைகளுக்கு தீர்வு என வலியுறுத்தல்

கொழும்பு,மே 11

ஜனாதிபதி மூன்று நாட்கள் கால அவகாசம் வழங்கி நாடாளுமன்றத்தைக் கூட்டுவதற்கான பிரகடனத்தை வெளியிட முடியும் என கொழும்பு பல்கலைக்கழக சட்ட பீட பேராசிரியர் அ. சர்வேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தை உடனடியாகக் கூட்டுமாறு சபாநாயகர் ஜனாதிபதியிடம் கோரிக்கை முன்வைத்துள்ளமை தொடர்பில் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இதேவேளை, நாட்டில் தற்போது காணப்படும் சிக்கல்களுக்கு ஜனாதிபதி பதவி விலகுவதே சிறந்த தீர்வாக அமையும் எனவும்கொழும்பு பல்கலைக்கழக சட்ட பீட பேராசிரியர் அ. சர்வேஸ்வரன் மேலும் தெரிவித்துள்ளார்.

Leave a Reply