
முன்னாள் பிரதமர் மகிந்த உள்ளிட்ட குழுவினரின் செயற்பாடுகளால் நாடு தலைகுனிய நேர்ந்துள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஜே.சி.அலவத்துவல இதனைத் தெரிவித்துள்ளார்.
எனவே நாட்டிற்கு அபகீர்த்தியை ஏற்படுத்திய முன்னாள் பிரதமர் உள்ளிட்ட அனைத்துத் தரப்பினருக்கு எதிராகவும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படவேண்டும்.
பிரச்சினைகளுக்கு உரிய தீர்வினைப் பெற்றுக்கொடுக்காமல், ஆர்ப்பாட்டக்காரர்கள்மீது தாக்குதல் நடத்தியமையினால் தற்போது நாடு அதன் நன்மதிப்பை இழந்துள்ளது.
அலரி மாளிகையிலிருந்து காலிமுகத்திடலை நோக்கிப் பயணித்த குண்டர் கும்பலைத் தடுப்பதற்கான வாய்ப்பு பொலிஸாருக்கு இருந்தது.
இதுகுறித்து உரியவாறான விசாரணைகள் முன்னெடுக்கப்படவேண்டியது அவசியமாகும் என்றும் ஜே.சி.அலவத்துவல குறிப்பிட்டுள்ளார்.

