மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்சுக்கு கொரோனா தொற்று

வாஷிங்டன், மே 11

உலக பெரும் பணக்காரர்களில் ஒருவரும் மைக்ரோசாப்ட் நிறுவனருமான  பில்கேட்சுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

லேசான அறிகுறிகளுடன் கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளதால்  தனிமைப்படுத்தி கொண்டுள்ளதாக பில்கேட்ஸ் டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.

பில்கேட்ஸ் கொரோனா தடுப்பூசிகளின் இரு டோஸ்களையும் பூஸ்டர் டோஸ் தடுப்பூசியும் செலுத்திக்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply