மஹிந்தவின் பாதுகாப்பு பிரதானி உள்ளிட்ட சிலர் CIDக்கு அழைப்பு

அமைதியான போராட்டங்கள் மீதான தாக்குதல்கள் தொடர்பாக வாக்குமூலம் பதிவு செய்யும் நடவடிக்கையை குற்றப்புலனாய்வு பிரிவு முன்னெடுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய, முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் பாதுகாப்புப் பிரிவின் பணிப்பாளர் உள்ளிட்ட தரப்பினரை குற்றப்புலனாய்வுப் பிரிவில் ஆஜராகுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

கடந்த 9 ஆம் திகதி “ மைனா கோ கம ” மற்றும் கோட்டா கோ கம ” ஆகிய அமைதிப் போராட்டங்களில் தாக்குதல் மேற்கொண்டமை தொடர்பில் வாக்குமூலம் வழங்கவே முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் பாதுகாப்புப் பிரிவின் பணிப்பாளர் உள்ளிட்ட தரப்பினரை குற்றப்புலனாய்வுப் பிரிவில் ஆஜராகுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

Leave a Reply