இரண்டாம் எலிசபெத் ராணி ஓய்வு பெற தீர்மானம்!

96 வயதுடைய லண்டன் மகாராணி எலிசபெத், தனது பணியில் இருந்து ஓய்வு பெற உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

வயது முதிர்ச்சி காரணமாக தனது பணிகளை அவர் சிரமத்துடன் மேற்கொண்டு வருவதால், இந்த ஓய்வு அவசியம் எனக் கருதப்படுகிறது. ஆட்சிப் பொறுப்பிற்கான அடுத்த பணி சுமைகளை சிறிது சிறிதாக இளவரசர் சார்லஸ் உடன் பகிர்ந்து வருவதாகவும் அறியப்பட்டுள்ளது.

வருடாந்தம் இங்கிலாந்தின் house of lords சபையில் இடம்பெறும் திறப்பு விழாவிலும் இந்த வருடம் இவர் கலந்துகொள்ளவில்லை என அறியப்பட்டுள்ளது.

கடந்த 60 ஆண்டுகளாக நடைபெற்று வரும் இந்த விழாவில் எலிசபெத் மகாராணி வருடந்தோறும் உரையாற்றும் வழக்கத்தைக் கொண்டிருந்தார்.

இந்த வருடம் வழமைக்கு மாறாக இளவரசர் சார்ஸ்ஸை தனக்கு பதிலாகக் கலந்துகொள்ளுமாறு கேட்டுள்ளார்.

மகாராணியின் பாராளுமன்ற சேவைகள் 70 வருடங்கள் அளவில் சிறப்பாக நடைபெற்று வந்தமை குறிப்பிடத்தக்கது. எவ்வாறாயினும் ஓய்வு அறிவித்தல் தொடர்பான உறுதிப்படுத்தப்பட்ட தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *