சீனாவின் பாரிய செயற்கைக்கோள் திட்டம் முன்னெடுப்பு

வானியல் ஆய்வுகளில் புதிய அபிவிருத்திகளை நோக்கி வளரும் சீனா, இப்போது நிலாவை சுற்றி செயற்கைக் கோள்களை நிறுவுவதற்கு தீர்மானித்துள்ளது.

ஏப்ரல் 24ஆம் திகதி, சீனாவின் தேசிய விண்வெளி ஆராய்ச்சி நிறுவன இயக்குனர் வு யான்ஹுவா குறிப்பிடும் போது, சீனா தகவல் தொடர்பு மற்றும் வழிகாட்டி அமைப்பு ஒன்றை நிறுவ உள்ளதாகக் கூறியுள்ளார்.

எதிர்வரும் 2023 அல்லது 2024 ஆம் ஆண்டு அளவில் இவை ஏவப்படும் பணி தொடங்கும் என குறிப்பிடப்படுவதோடு, இதில் கலந்துகொள்ள விரும்பும் வேறு நாட்டு விஞ்ஞானிகளை அழைப்பு விடுத்துள்ளனர்.

ஏற்கனவே சீனா அதன் விண்வெளி ஆராய்ச்சிகளை இராணுவ நோக்கத்திற்காகப் பயன்படுத்துகிறது எனும் குற்றசாட்டு இருந்திருந்த நிலையில், இவ்வாறான நடவடிக்கைகள் மேலும் எதிரி நாடுகளிற்கு சவாலாக எழுந்துள்ளன.

மேலும் சீனா தொடர்ந்து change 6, change 7 change 8 போன்ற நிலவு சார் ஆராய்ச்சி திட்டங்களை நடைமுறைப்படுத்த உள்ளதாகவும் அறியப்பட்டுள்ளது.

Leave a Reply