வன்முறை சம்பவங்கள் தொடர்பாக நெருக்கமாக அவதானித்து வருவதாக சீனா அறிவிப்பு

<!–

வன்முறை சம்பவங்கள் தொடர்பாக நெருக்கமாக அவதானித்து வருவதாக சீனா அறிவிப்பு – Athavan News

இலங்கையில் ஏற்பட்டுள்ள வன்முறை சம்பவங்கள் தொடர்பாக நெருக்கமாக அவதானித்து வருவதாக சீனா அறிவித்துள்ளது.

எனவே இங்கு பணிபுரியும் சீனப் பிரஜைகளை எச்சரிக்கையாகவும் அவதானமாகவும் இருக்குமாறு சீனா கேட்டுக் கொண்டுள்ளது.

தலைநகர் கொழும்பு மற்றும் பிற இடங்களில் இடம்பெற்ற மோதல்கள் ஒப்பீட்டளவில் பெரிய உயிரிழப்புகளை ஏற்படுத்தியது என சீனாவின் வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.

வன்முறைகள் காரணமாக ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ள நிலையில் நாட்டில் சமாதானமும் ஸ்திரத்தன்மையும் ஏற்படும் என நம்புவதாக சீன வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.


Leave a Reply