கோட்டாபாய தலைமையிலான அரசாங்கத்தை பதவி விலகுமாறு கோரி நாடளாவிய ரீதியில் பல்வேறு எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்கள் கடந்த ஒரு மாதத்திற்கு மேலாக இடம்பெற்று வருகின்றது.
இந்நிலையில் நேற்றுமுன்தினம் முதல் ஆர்ப்பாட்டங்கள் நடைபெறும் பகுதிகளுக்குள் நுழைந்த அரசதரப்பு ஆதரவாளர்களால் குழப்பநிலை தோன்றியது.
அதேவேளை பிரதமர் பதவியிலிருந்து மகிந்த ராஜபக்ச விலகுவதாக அறிவித்திருந்தார்.
இவ்வாறான நிலையில் நேற்றுமுன்தினம் இரவு முதல் அரசதரப்பு பாராளுமன்ற உறுப்பினர்களின் வீடுகள் பொதுமக்களால் தீக்கிரையாக்கப்பட்டது.
இவ்வாறான நிலையில் எதிர்க்கட்சி தரப்பில் அங்கம் வகிக்கும் அனைத்து கட்சிகளும் ஒண்றினைந்து ஜனாதிபதியை பதவி விலகக் கோர வேண்டும் என மொரட்டுவ மாநகர சபை உறுப்பினர் சட்டத்தரணி லிஹினி பெர்னாண்டோ கோரிக்கை விடுத்துள்ளார்.


