ஆளும் கட்சியினருக்கு ஏற்பட்ட நிலை;வெளிநாட்டுத் தூதரங்களுக்கு தூது!

நேற்றுமுன்தினம் காலிமுகத்திடல் மற்றும் அலரி மாளினை முன்பாக இடம்பெற்ற வண்முறையை தொடர்ந்து அரச தரப்பினரின் வீடுகள், காரியாலயங்கள் , வாகனங்கள் மீது பொதுமக்கள் தீவைத்துள்ளனர்.

இந்நிலையில் அரசதரப்பு பாராளுமன்ற உறுப்பினர்கள் அச்சம் காரணமாக தமது உத்தியோகபூர்வ இல்லங்களில் இருந்து வெளியேறி தலைமறைவான நிலையில் நிலைமைகளை அவதானித்து வருகின்றனர்.

இவ்வாறான நிலையில் நாட்டில் தற்போது காணப்படும் நிலைமையில் தமக்கு எவ்வித பாதுகாப்பும் இல்லை என ஆளும் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலர் கடிதங்கள் மூலம் கொழும்பில் உள்ள வெளிநாட்டுத் தூதரங்களுக்கு அறிவித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

Leave a Reply