பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்யவே இராணுவ வாகனங்கள் நிறுத்தப்பட்டுள்ளன! – இராணுவம்

இராணுவ வாகனங்கள் பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்ய நிறுத்தப்பட்டுள்ளன என இராணுவம் அறிவித்துள்ளது.

கொழும்பின் பல வீதிகளில் இராணுவ வாகனங்கள் கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றன.

அத்தோடு, சோதனைச்சாவடிகளிலும் அதிகளவான இராணுவத்தினர் குவிக்கப்பட்டுள்ளனர்.

நாட்டில் ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ள நிலையில், இவ்வாறு இராணுவத்தினர் கண்காணிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *