சஜித் பிரேமதாஸ சீன தூதுவர் சந்திப்பு

இலங்கைக்கான சீனத் தூதுவர் கி ஸெங்ஹொங் மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ ஆகியோருக்கு இடையிலான சந்திப்பு இன்று (11) எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் இடம்பெற்றது.

இலங்கையில் ஏற்பட்டுள்ள நெருக்கடியான தருணத்தில் நாட்டுக்கு சகோதரத்துவத்தின் கரங்களை நீட்டுமாறு சீனத் தூதுவருக்கு எதிர்க்கட்சித் தலைவர் கோரிக்கை ிவடுத்துள்ளார்.

இதன்போது நாடு தற்போது எதிர்நோக்கும் நிலைமை குறித்தும் கவனத்திற்கொள்ளப்பட்டது.

நாட்டில் ஊழல், அடக்குமுறைகளை ஒழித்து எமது நிர்வாகத்தில் முன்னுரிமை வழங்கப்படும் என எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்துள்ளார்.

’தற்போதைய இக்கட்டான சூழ்நிலையில் இருந்து இலங்கை மீள்வதற்கு சீனாவின் தாராளமான ஆதரவு மிகவும் அவசியமானது எனவும் தெரிவித்தார்.
இந்த நிகழ்வில் நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வாவும் கலந்துகொண்டார்.

இதேவேளை ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ச பதவி விலகினால் புதிய அரசாங்கத்தில் பிரதமர் பதவியை ஏற்க எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாஸ தயாராக இருப்பதாக நாடாளுமன்ற உறுப்பினர் லக்‌ஷ்மன் கிரியெல்ல தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply