பாதுகாப்பு அங்கீகாரம் கிடைத்தால் எரிபொருள் வழமைக்கு திரும்பும்

கொழும்பு,மே 11

பாதுகாப்பு அதிகாரிகளிடம் இருந்து உறுதிப்படுத்தல் கிடைத்தவுடன் இன்று பிற்பகல் 2.00 மணிக்குப் பின்னர் எரிபொருள் விநியோகம் ஆரம்பிக்கப்படும் என இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபன அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

நாட்டில் ஏற்பட்டுள்ள மோதல் சூழ்நிலை காரணமாக எரிபொருள் விநியோகம் கடந்த திங்கட்கிழமை முதல் முற்றாக இடைநிறுத்தப்பட்டுள்ளது.

அமைதியின்மை தொடங்கியவுடன், எரிபொருள் பவுசர்களுக்கு பாதுகாப்பு இல்லாததால் விநியோகத்தை நாங்கள் உடனடியாக நிறுத்தினோம். எந்தவொரு எரிபொருள் பவுசரையும் மக்கள் தாக்கினால், சாத்தியமான தீ குறிப்பிட்ட பகுதியில் பாரிய சேதத்தை ஏற்படுத்தக்கூடும் என்று அந்த அதிகாரி கூறினார்.

எரிபொருள் பவுசர்களை விடுவிப்பதற்கான பாதுகாப்பு அங்கீகாரம் இன்று பிற்பகல் 2.00 மணிக்குப் பின்னர் கிடைக்கப்பெறும் என அவர் தெரிவித்துள்ளார்.

எவ்வாறாயினும், இலங்கை போக்குவரத்து சபை, புகையிரத திணைக்களம், இலங்கை துறைமுக அதிகார சபை ஆகியவற்றிற்கு இராணுவத்தினரின் பாதுகாப்புடன்  எரிபொருள் விநியோகத்திற்கு அனுமதி வழங்கப்பட்டது.

Leave a Reply