தனிப்பட்ட சேமிப்புகளுக்கு அனுமதி வழங்கப்படவில்லை: லிட்ரோ

கொழும்பு,மே 11

தமது அங்கீகரிக்கப்பட்ட விநியோகஸ்தர்கள் மற்றும் முகவர்கள் மூலமாக மட்டுமே எரிவாயு விநியோகம், சேமிப்பு மற்றும் விற்பனை என்பன மேற்கொள்ளப்படுவதாக லிட்ரோ கேஸ் நிறுவனம் கூறுகிறது.

அதற்கு முரணான வகையிலான சேமித்தல் மற்றும் கொள்கலன் இருப்புகளை பேணுப்படுமாயின் அது லிட்ரோ கேஸ் நிறுவனத்தின் அனுமதியல்லாமல் மேற்கொள்ளப்படும் நடவடிக்கையாகும் என அந்நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையொன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்தகைய தனிப்பட்ட சேமிப்புகளுக்கு அனுமதி வழங்கப்படவில்லை என்றும் அந்த அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *