ஜனாதிபதியின் உரைக்கு முன்பாக நாமல் வெளியிட்ட கருத்து

கொழும்பு, மே 11

பிரதமர் மஹிந்த ராஜபக்‌ஷ ராஜினாமா செய்து கிட்டத்தட்ட 2 நாட்கள் ஆகிறது. ஒரு இடைக்கால அரசாங்கத்தை நிறுவ வேண்டும் என நாமல் ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ இன்று இரவு 9 மணிக்கு நாட்டு மக்களுக்கு உரையாற்றவுள்ள நிலையில் ஒரு மணி நேரத்திற்கு முன்னதாக இந்த தகவலை தனது உத்தியோக பூர்வ டுவிட்டர் தளத்தில் தெரியப்படுத்தியுள்ளார்.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ உடனடியாக ஒரு சுதந்திர அரசாங்கத்தை நியமிக்க வேண்டும். மேலும் மேலும் தாமதமானது நாட்டின் பொருளாதாரத்தை மேலும் மோசமாக்கும் என குறிப்பிட்டுள்ளார்.

Leave a Reply