இலங்கையில் வருடமொன்றுக்கு 3 இலட்சம் முதல் 3 இலட்சத்துக்கு 50 ஆயிரம் வரையில் நாய்க்கடியால் பாதிக்கப்பட்டு, வைத்தியசாலைகளில் சிகிச்சைப்பெறுகின்றனர்.
20 தொடக்கம் 30 வரையிலானோர் நீர்வெறுப்பு நோயினால் பாதிக்கப்படுகின்றனர்.
நீர்வெறுப்பு நோயை (விசர் நாய்க்கடி) கட்டுப்படுத்துவதற்காக வருடமொன்றுக்கு 600 மில்லியனுக்கும் அதிகமாக அரசாங்கத்தால் செலவிடப்படுகின்றது.
1970களில் நீர்வெறுப்பு நோயினால் மரணிப்போரின் எண்ணிக்கை வருடமொன்றுக்கு 350க்கும் 380க்கும் இடையில் இருந்தது. 2014 ஆம் ஆண்டளவில் ஆகவும் குறைவாக 19 மரணங்கள் பதிவாகின.
நீர்வெறுப்பு நோயை இலங்கையிலிருந்து முற்றாக ஒழிப்பதற்காக, பல்வேறான செயற்றிட்டங்கள் முன்னெடுக்கப்படுகின்றன. நாயொன்று பிறந்த 4-6 வாரங்களுக்கு இடையில் நீர்வெறுப்பு தடுப்பூசி வழங்கப்படுகின்றது. மூன்று மாதங்களுக்கு பின்னர் மற்றுமொரு
தடுப்பூசி வழங்கப்படுகின்றது.
நீர்வெறுப்பு தடுப்பூசியை 70 சதவீதம் ஏற்றுவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்றன.
இதனூடாக இலங்கையிலிருந்து 2025 ஆம் ஆண்டளவில் நீர்வெறுப்பு நோயை முற்றாக இல்லாதொழிக்கலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
பன்னாட்டு நீர்வெறுப்பு தினம் இன்றாகும் (28). இதனையொட்டி, எம்பிலிப்பிட்டியவில் தெரு நாய்களுக்கு நீர்வெறுப்பு தடுப்பூசி மற்றும் கருத்தடைச் செய்தல், சப்ரகமுவ மாகாண ஆளுநர் டிக்கிரி கொப்பேகடுவையினால், நேற்று முன்னெடுக்கப்பட்டது.


