மத்தல விமான நிலையம் பதிவு செய்த சாதனை!

மத்தல சர்வதேச விமான நிலையம் இந்த ஆண்டு அதிக பயணிகள் வருகையை பதிவு செய்து சாதனை படைத்துள்ளதாக அமைச்சர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

2021 ஜனவரி முதல் இன்றுவரை மொத்தம் 25,767 பயணிகள் மத்தள விமான நிலையத்தை பயன்படுத்தியுள்ளனர்.

2020 இல் பயணிகளின் வருகை 17,544 ஆகவும், 2019 இல் 1,403 ஆகவும் இருந்ததாக அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

மத்தல விமான நிலையத்திற்கு வரும் பயணிகளின் எண்ணிக்கை மட்டுமல்ல, சரக்குகளின் எண்ணிக்கையும் மற்ற ஆண்டுகளுடன் ஒப்பிடுகையில் அதிகரித்துள்ளதாக அமைச்சர் கூறினார்.

மேலும், மத்தல சர்வதேச விமான நிலையத்தை பிராந்தியத்தின் சிறந்த விமான நிலையமாக மாற்றுவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்திருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

Leave a Reply