நாட்டை திறப்பதற்கு தேவையான அனைத்து நடவடிக்கையும் முன்னெடுப்பு

ஒக்டோபர் முதலாம் திகதி நாட்டை  திறப்பதற்கு  தேவையான அனைத்து நடவடிக்கைகளும்  எடுக்கப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

பொதுப் போக்குவரத்து உள்ளிட்ட சேவை குறித்து தேவையான பரிந்துரைகளை வழங்குமாறு சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்திற்கு அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.

இதேவேளை ஊரடங்கு சட்டம் தளர்த்தப்பட்ட பின்னர் பொதுமக்கள் கடைபிடிக்க வேண்டிய சுகாதார வழிகாட்டல்களை தயாரிக்குமாறு அனைத்து அமைச்சுக்களுக்கும் அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.

அத்துடன்  தடுப்பூசி  பெறாதவர்கள் பொது இடங்களில் நடமாடுவதற்கு கட்டுப்பாடு விதிப்பது குறித்து எந்த வழிகாட்டுதல்களும் வெளியிடப்படவில்லை எனவும் இராணுவத் தளபதி குறிப்பிட்டார்.

Leave a Reply