கோவிட் பரவல் மற்றும் பிரயாணத் தடை காரணமாக வருமானத்தினை இழந்து கஸ்டப்படுகின்ற குடும்பங்களுக்கு வன்னி ஹோப் அவுஸ்ரேலியா நிறுவனம் அனுசரணையில் ஏழாம் கட்டமாக அத்தியாவசிய உலர் உணவுப் பொதிகள் மக்கள் சேவை மன்றத்தினால் நேற்று (27) மன்றத்தின் தலைவர் எம். ரீ. எம். பாரிஸ் தலமையில் செருவில, மஹிந்திப்புற சோமவாதி கிராமத்தில் கிராமத்தின் விகராதிபதி இன் ஆசீர்வாதத்துடன் வழங்கி வைக்கப்பட்டது.
அத்தியாவசிய உணவுப் பொருட்களுக்கான விலையேற்றம், தனிமைப்படுத்தல் ஊரடங்கு போன்ற அசாதாரண சூழலில் ஒரு வேளை உணவுத் தேவையை பூர்த்தி செய்யமுடியாது மக்கள் கஸ்டப்பட்டு வருகின்றனர்.
இவ்வாறான மக்களின் அடிப்படை உணவுத் தேவைகளை நிவர்த்தி செய்துவரும் பணியில் வன்னி ஹோப் அவுஸ்ரேலியா நிறுவனமும் திருகோணமலை மக்கள் சேவை மன்றமும் இணைந்து பல உதவிகளை மேற்கொண்டு வருகின்றது.
வன்னி ஹோப் நிறுவனத்தின் இடர்கால நிவாரணப் பணித் திட்டத்தின் கீழ் 125 உலர் உணவுப் பொதிகள் பகிர்ந்தளிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது,