வீடொன்றில் இருந்து மீட்கப்பட்ட பொருட்கள்

மத்துகம – யட்டதொலவத்த பிரதேசத்தில் வீடொன்றில் இருந்து போதைப்பொருட்கள் மற்றும் துப்பாக்கியொன்று பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளது.

இதனை பொலிஸ் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ தெரிவித்தார்.

இந்த சோதனை நடவடிக்கையின் போது குறித்த வீட்டிலிருந்து 1.55 கிலோகிராம் ஹெரோயினும், 50 கிராம் ஐஸ் போதைப்பொருளும், வெளிநாட்டில் உற்பத்தி செய்யப்பட்ட துப்பாக்கியொன்றும் மீட்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

Leave a Reply