மட்டக்களப்பில் வீடு ஒன்றிலிருந்து சிறுமி ஒருவர் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக சடலம் கண்டெடுப்பு!

மட்டக்களப்பு தலைமையக பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் உள்ள வீடு ஒன்றிலிருந்து சிறுமி ஒருவர் தூக்கில் தொங்கிய நிலையில்  சடலம் கண்டெடுப்பு.

நேற்று (திங்கட்கிழமை) இரவு மட்டக்களப்பு அரசடி,பொற்கொல்லர் வீதியில் உள்ள வீடு ஒன்றில் சிறுமி ஒருவர் தூக்கில் தொங்குவதான தகவல்கள் கிடைத்ததை தொடர்ந்து மட்டக்களப்பு தலைமையக பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்தனர்.

குறித்த சிறுமி மட்டக்களப்பின் பிரபல பெண்கள் பாடசாலையில் தரம் 08கல்வி பயிலும் 13வயது சிறுமியென பொலிஸார் தெரிவித்தனர்.

சிறுமி தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டதாகவும் குறித்த சிறுமியின் மரணம் தொடர்பில் பல்வேறு கோணங்களில் விசாரணைகள் முன்னெடுக்கப்படுவதாகவும் மட்டக்களப்பு தலைமையக பொலிஸார் தெரிவித்தனர்.

நேற்று மாலை பெற்றோர் வெளியில் சென்ற நிலையில் சகோதரிகள் இருவர் வீட்டிலிருந்துள்ளதாகவும் உயிரிழந்த சிறுமி சூம் ஊடாக கற்றல் நடவடிக்கையிலிருந்த நிலையில் அவரது அக்கா குளியலறையிலிருந்துள்ளதாகவும் குளியலறையிலிருந்து வந்தபோது சூம் ஊடாக கற்றல் நடவடிக்கையிலிருந்த தங்கை தூக்கில் தொங்கிய நிலையிலிருந்துள்ளதாக பொலிஸாரிடம் தெரிவித்துள்ளார்.

குறித்த சிறுமியின் மரண விசாரணையை மட்டக்களப்பு நீதிவான் நீதிமன்ற நீதிபதியின் அறிவுறுத்தலுக்கு அமைவாக திடீர் மரண விசாரணை அதிகாரி சிதம்பரப்பிள்ளை ஜீவரெட்னம் மேற்கொண்டார்.

அதனை தொடர்ந்து சடலம் பிரேத பரிசோதனைகளுக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு கொண்டுசெல்லப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *