புதிய பிரதமர் ரணிலுடன் இணைந்து பணியாற்ற ஆவலுடன் காத்திருக்கிறோம்! அமெரிக்க தூதுவர்

புதிய பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுடன் இணைந்து பணியாற்ற எதிர்பார்த்துள்ளதாக அமெரிக்க தூதுவர் ஜூலி சுங் தெரிவித்துள்ளார்.

புதிய பிரதமர் ரணிலுக்கு டுவிட்டரில் வாழ்த்து தெரிவித்த அமெரிக்க தூதுவர், மேலும் தெரிவிக்கையில்,

ரணில் விக்கிரமசிங்கவுடன் இணைந்து பணியாற்ற ஆவலுடன் காத்திருக்கிறோம். பிரதமர் உட்பட அனைவரையும் உள்ளடக்கிய அரசாங்கத்தை விரைவாக உருவாக்குவது, நெருக்கடியைச் சமாளிப்பதற்கும் ஸ்திரத்தன்மையை மேம்படுத்துவதற்கும் முதல் படிகளாகும்.

IMF அனைத்து இலங்கையர்களின் தேவைகளையும் பூர்த்தி செய்வதோடு, நீண்ட கால தீர்வுகளில் அர்த்தமுள்ள முன்னேற்றத்தை நாங்கள் ஊக்குவிக்கிறோம் என அமெரிக்க தூதர் ட்வீட் செய்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *