
ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க சற்றுமுன் பிரதமராக சத்தியப்பிரமாணம் செய்து கொண்டார்.
இந்நிலையில் பல்வேறு கட்சிகளின் பிரதிநிதிகளும் தங்கள் வாழ்த்துக்களை பதிவு செய்து வருகின்றனர்.
பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில்,
அவர் நமது இலங்கையை முன்னோக்கி செலுத்தும் பணியை மேற்கொள்வதில் மிகச் சிறந்தவர். உன்னத மும்மூர்த்திகள் உங்களை வழிநடத்தி பாதுகாக்கட்டும் என வாழ்த்தியுள்ளார்.
இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் தலைவர் செந்தில் தொண்டமானின் வாழ்த்துச் செய்தியில்,
இலங்கையின் புதிய பிரதமராக நியமனம் பெற்ற கெளரவ ரணில் விக்ரெமசிங்கே அவர்களுக்கு வாழ்த்துக்கள்.உங்கள் செயல்கள் பொருளாதாரத்தை நிலைகுலைய வைத்து நெருக்கடியை விரைவில் தீர்க்கும் என்று நம்புகிறேன் என குறிப்பிட்டுள்ளார்.
பாராளுமன்ற உறுப்பினர் நிமல் லான்சா வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில்,
நாட்டில் இன்று நிலவும் பொருளாதார சவால்களை தீர்க்க, இக்கட்டான சூழ்நிலையில் நிபந்தனையின்றி பிரதமராக பதவி ஏற்க எனது மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன் என குறிப்பிட்டுள்ளார்.