புதிய பிரதமருக்கு நாமல் வாழ்த்து

கொழும்பு,மே 12

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க சற்றுமுன் பிரதமராக சத்தியப்பிரமாணம் செய்து கொண்டார்.

இந்நிலையில் பல்வேறு கட்சிகளின் பிரதிநிதிகளும் தங்கள் வாழ்த்துக்களை பதிவு செய்து வருகின்றனர்.

பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில்,

அவர் நமது இலங்கையை முன்னோக்கி செலுத்தும் பணியை மேற்கொள்வதில் மிகச் சிறந்தவர். உன்னத மும்மூர்த்திகள் உங்களை வழிநடத்தி பாதுகாக்கட்டும் என வாழ்த்தியுள்ளார்.

Leave a Reply